நெல்லை ரதவீதிகளில் விளம்பர போர்டுகளை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தல்

நெல்லை ரதவீதிகளில் விளம்பர போர்டுகளை அகநெல்லை ரதவீதிகளில் விளம்பர போர்டுகளை அகற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர். ற்ற அதிகாரிகள் அறிவுறுத்தினர்.;

Update: 2023-06-30 20:01 GMT

நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி உத்தரவின்படி நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு தேர் செல்லும் 4 ரதவீதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகள், விளம்பர போர்டுகள், கடையின் முன்புறம் நீட்டி வைக்கப்பட்டுள்ள தகரம் மற்றும் தள்ளுவண்டி கடைகள், பூக்கடை, பானிபூரி கடை, போத்தீஸ் கடை அமைந்துள்ள சாலையில் நிறுத்தி வியாபாரம் செய்யும் கடைகள் ஆகிய அனைத்து கடைகளையும் அகற்றும்படி 4 ரதவீதிகளிலும் நடந்தே சென்று ஒலிப்பெருக்கி மூலம் அறிவுறுத்தப்பட்டது.

இதில் போலீஸ் உதவி கமிஷனர் சுப்பையா, மாநகராட்சி உதவி ஆணையாளர் வெங்கட்ராமன், உதவி செயற்பொறியாளர் சரவணகுமார், சுகாதார அலுவலர் இளங்கோ, சுகாதார ஆய்வாளர் பாலசுப்பிரமணியன், போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்