ஓட்டப்பிடாரம் அருகே கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா
ஓட்டப்பிடாரம் அருகே கர்ப்பிணி பெண்களுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடைபெற்றது.;
ஓட்டப்பிடாரம்:
ஓட்டப்பிடாரம் அருகே உள்ள புதியம்புத்தூர் செங்குந்த முதலியார் திருமண மண்டபத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சிப் பணிகள் திட்டம் சார்பில் சமுதாய வளைகாப்பு விழா நடந்தது. விழாவிற்கு ஓட்டப்பிடாரம் யூனியன் தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார். வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கமணி முன்னிலை வகித்தார். வட்டார குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் காயத்ரி வரவேற்று பேசினார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக எம்.சி.சண்முகையா எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 350 கர்ப்பிணி பெண்களுக்கு, மஞ்சள் கயிறு, பூ, வளையல் அடங்கிய வளைகாப்பு சீர் பொருட்களை வழங்கினார்.
விழாவில் யூனியன் கூடுதல் ஆணையாளர் பாண்டியராஜன், தி ஜான் பெப்டிஸ்ட் மேல்நிலைப்பள்ளி தாளாளர் செந்தூர்மணி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ஆறுமுகம், சுகாதார ஆய்வாளர் காளிமுத்து, தேவசகாயம் மற்றும் அரசு அலுவலர்கள், கர்ப்பிணி பெண்கள், ஊட்டச்சத்து அமைப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.
முன்னதாக தெற்குவீரபாண்டியபுரம் கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணி புரியும் பொதுமக்களிடம் எம்.எல்.ஏ குறைகள் கேட்டறிந்தார்.