சீனா ஓபன் டென்னிஸ்: அல்காரஸ் அரையிறுதிக்கு முன்னேற்றம்
அல்காரஸ் அரையிறுதியில் மெத்வதேவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.;
பீஜிங்,
சீன ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி பீஜிங் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் காலிறுதி ஆட்டம் ஒன்றில் விம்பிள்டன் சாம்பியனும், 3-ம் நிலை வீரருமான கார்லஸ் அல்காரஸ் (ஸ்பெயின்), கரேன் கச்சனோவ் (ரஷியா) உடன் மோதினார்.
இதில் முதல் செட்டை டை பிரேக்கரில் கைப்பற்றிய அல்காரஸ், அடுத்த செட்டை எளிதில் கைப்பற்றினார். இந்த ஆட்டத்தில் அல்காரஸ் 7-5 மற்றும் 6-2 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.
இவர் அரையிறுதியில் மெத்வதேவ் உடன் பலப்பரீட்சை நடத்த உள்ளார்.