மாற்றுத்திறனாளிகளுக்கான நீச்சல் போட்டி: இந்திய வீரர் புதிய சாதனை

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி போர்ச்சுகல் நாட்டில் நடந்து வருகிறது.

Update: 2022-06-17 03:06 GMT

image tweeted by @biharfoundation

போர்ச்சுக்கல்,

மாற்றுத் திறனாளிகளுக்கான உலக பாரா நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டி போர்ச்சுகல் நாட்டில் நடந்து வருகிறது.

இதில் ஆண்களுக்கான 200 மீட்டர் தனிநபர் மெட்லே பந்தயத்தின் தகுதி சுற்றில் இந்திய வீரர் முகமது ஷம்ஸ் ஆலம் ஷேக் 4 நிமிடம் 39.71 வினாடியில் பந்தய தூரத்தை கடந்து புதிய தேசிய சாதனை படைத்ததுடன், 6-வது இடம் பிடித்தார்.

இதற்கு முன்பு முகமது ஷம்ஸ் ஆலம் 4 நிமிடம் 43.39 வினாடியில் பந்தய தூரத்தை கடந்ததே தேசிய சாதனையாக இருந்தது. தற்போது தனது முந்தைய சாதனையை தகர்த்துள்ளார்.

 

Tags:    

மேலும் செய்திகள்