மாணவர் சாதனை
சதுரங்க போட்டியில் டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர் சாதனை படைத்தான்;
தென்காசி பொதிகை செஸ் டெவலப்மெண்ட் அசோசியேஷன் சார்பில் மாவட்ட அளவிலான சதுரங்க போட்டி நடைபெற்றது. இதில் செங்கோட்டை டிரஷர் ஐலண்ட் பள்ளி மாணவர் எஸ்.வசீகரன் கலந்து கொண்டு மாவட்ட அளவில் 2-ம் இடம் பிடித்து வெற்றி பெற்றார். சாதனை படைத்த மாணவரை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, பள்ளியின் முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.