மாநில வில்வித்தை போட்டி: சென்னையில் நாளை தொடக்கம்
மாநில வில்வித்தை போட்டிகள் சென்னையில் நாளை தொடங்க உள்ளது.
சென்னை,
15-வது தமிழ்நாடு மாநில வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டி சென்னை அடையாறில் உள்ள டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியில் நாளை (சனிக்கிழமை) முதல் 22-ந்தேதி வரை நடக்கிறது. இந்த போட்டியில் மாநிலம் முழுவதும் இருந்து 1592 வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள். அவர்களுக்கு ரீகர்வ், காம்பவுண்ட், இந்தியன் ரவுண்ட் ஆகிய பிரிவுகளில் போட்டி நடத்தப்படுகிறது.
இந்த தகவலை தமிழ்நாடு வில்வித்தை சங்க பொதுச் செயலாளர் ஷிகான் உசேனி தெரிவித்தார்.