அடுத்த சுற்று வாய்ப்பை இழந்த தமிழ் தலைவாஸ் அணி

தமிழ் தலைவாஸ் அணி 6 வெற்றி, 12 தோல்வி, ஒரு சமன் என்று 9-வது இடத்தில் உள்ளது

Update: 2024-12-15 20:15 GMT

புனே,

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும், 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் நடைபெற்று முடிந்தன. இந்த தொடரின் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது.இந்நிலையில்,

இந்த தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - தமிழ் தலைவாஸ் அணிகள் மோதின. தொடக்கம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி புள்ளிகள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியது.இறுதியில் இந்த ஆட்டத்தில் 34-27 என்ற புள்ளிக்கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வீழ்த்தி ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் வெற்றி பெற்றது.

இந்த தோல்வியின் மூலம் தமிழ் தலைவாஸ் அணி அடுத்த சுற்று (பிளே-ஆப்) வாய்ப்பை இழந்தது. தமிழ் தலைவாஸ் அணி இதுவரை 19 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றி, 12 தோல்வி, ஒரு சமன் என்று 40 புள்ளிகளுடன் 9-வது இடத்தில் உள்ளது. தமிழ் தலைவாஸ் அணி லீக் சுற்றுடன் வெளியேறுவது இது 6-வது முறையாகும்.  

Tags:    

மேலும் செய்திகள்