பெடரேஷன் கோப்பை தடகள போட்டியில் பங்கேற்கும் நீரஜ் சோப்ரா
தேசிய பெடரேஷன் கோப்பை தடகள போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது.
புதுடெல்லி,
தேசிய பெடரேஷன் கோப்பை தடகள போட்டி ஒடிசா மாநிலம் புவனேஷ்வரில் வருகிற 12-ந் தேதி முதல் 15-ந் தேதி வரை நடைபெற உள்ளது. ஒலிம்பிக் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஈட்டி எறிதலில் தங்கப்பதக்கம் வென்றவரான அரியானாவை சேர்ந்த 26 வயது நீரஜ் சோப்ரா, ஆசிய விளையாட்டு போட்டியில் வெள்ளிப்பதக்கம் வென்ற ஒடிசாவை சேர்ந்த 28 வயது ஈட்டி எறிதல் வீரர் கிஷோர் குமார் ஆகியோர் இந்த போட்டியில் பங்கேற்கிறார்கள்.
தோகாவில் வருகிற 10-ந் தேதி நடைபெறும் டயமண்ட் லீக் தடகள போட்டியில் பங்கேற்கும் அவர்கள் அந்த போட்டி முடிந்ததும் பெடரேஷன் கோப்பை போட்டியில் கலந்து கொள்கிறார்கள். இந்த தகவலை இந்திய தடகள சம்மேளனம் தெரிவித்துள்ளது. கடந்த 3 ஆண்டுகளில் இந்தியாவில் நடைபெறும் போட்டியில் ஒலிம்பிக் கதாநாயகன் நீரஜ் சோப்ரா கலந்து கொள்வது இதுவே முதல்முறையாகும்.