கொரியா ஓபன் பேட்மிண்டன்: பிரனாய், ரஜாவத் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது.;
யோசு,
கொரியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி யோசு நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் 21-13, 21-17 என்ற நேர்செட்டில் பெல்ஜியத்தின் ஜூலியன் கராக்ஜியை வெளியேற்றி 2-வது சுற்றுக்கு முன்னேறினார். மற்றொரு இந்திய வீரர் பிரியான்ஷூ ரஜாவத் 21-15, 21-19 என்ற செட்டில் தென்கொரியாவின் சோய் ஜி ஹோனை தோற்கடித்தார்.
அதே சமயம் இந்திய முன்னணி வீரர் ஸ்ரீகாந்த் 21-12, 22-24, 17-21 என்ற செட் கணக்கில் முன்னாள் உலக சாம்பியன் கென்டோ மோமோட்டாவிடம் (ஜப்பான்) வீழ்ந்தார். அவரிடம் ஸ்ரீகாந்த் தொடர்ச்சியாக சந்தித்த 12-வது தோல்வி இதுவாகும். கிரண் ஜார்ஜ், மிதுன் மஞ்சுநாத் ஆகிய இந்தியர்களும் முதல் சுற்றுடன் நடையை கட்டினர்.