சர்வதேச செஸ்: பிரக்ஞானந்தா 3-வது வெற்றி

சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது.

Update: 2024-03-05 23:19 GMT

பராக்,

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகிறார்கள். இதன் 6-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா, உஸ்பெகிஸ்தானின் நோடிர்பெக் அப்துசத்தரோவை எதிர்கொண்டார்.

கருப்பு நிற காயுடன் ஆடிய பிரக்ஞானந்தா 56-வது நகர்த்தலில் அப்துசத்தரோவை தோற்கடித்தார். பிரக்ஞானந்தாவுக்கு இது 3-வது வெற்றியாகும். மற்ற ஆட்டங்களில் இந்தியாவின் டி. குகேஷ், விதித் குஜராத்தி ஆகியோர் தங்களது ஆட்டத்தில் தோல்வியை தழுவினர்.

6 சுற்று முடிவில் நோடிர்பெக் அப்துசத்தரோவ் 4 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், ரிச்சர்ட் ராப்போர்ட் (ஹங்கேரி), பர்ஹாம் மக்சூட்லூ (ஈரான்), பிரக்ஞானந்தா தலா 3½ புள்ளிகளுடன் 2-வது இடத்திலும் உள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்