'ஏம்செஸ் ரேபிட் போட்டி'- உலக சாம்பியன் கார்ல்சனுக்கு அதிர்ச்சி அளித்த இந்திய வீரர் அர்ஜுன் எரிகைசி

உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் வெற்றியை வசமாக்கினார்.

Update: 2022-10-16 14:09 GMT

Image Courtesy: PTI/ AFP   

சென்னை,

இந்திய கிராண்ட்மாஸ்டர் அர்ஜுன் எரிகைசி, ஏம்செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் போட்டியின் 7-வது சுற்றில் உலக சாம்பியனான மேக்னஸ் கார்ல்சனை வீழ்த்தி அசத்தியுள்ளார். போட்டியின் 54-வது நகர்த்தலின் போது அர்ஜுன் வெற்றியை வசமாக்கினார்.

இந்த தொடரின் 8 சுற்றுகளுக்கு பிறகு 19 வயதான எரிகைசி, 5-வது இடத்தில் நீடிக்கிறார். ஏம்செஸ் ரேபிட் ஆன்லைன் செஸ் போட்டியில் தனது தொடக்க ஆட்டத்தில் சகநாட்டவரான விடித் சந்தோஷிடம் அர்ஜுன் எரிகைசி தோல்வியை தழுவி இருந்தார்.

அதன் பிறகு அவர் நில்ஸ் கிராண்டலியஸ் (ஸ்வீடன்), டேனியல் நரோடிட்ஸ்கி (அமெரிக்கா) ஆகியோரை வீழ்த்தி இருந்த நிலையில் தற்போது கார்ல்சனை வீழ்த்தி கவனம் பெற்றுள்ளார்.

எரிகைசி கடந்த மாதம் "ஜூலியஸ் பேர் ஜெனரேஷன் கோப்பை" ஆன்லைன் போட்டியின் இறுதிப் போட்டியில் கார்ல்சனிடம் தோல்வி அடைந்து இருந்த நிலையில் தற்போது அதற்கு பதிலடி கொடுத்துள்ளார். இது கார்ல்சனுக்கு எதிராக அர்ஜுன் எரிகைசி பெறும் முதல் வெற்றியாகும்.

Tags:    

மேலும் செய்திகள்