ஸ்குவாஷ் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா தோல்வி
சென்னையில் நடைபெற்று வரும் ஸ்குவாஷ் உலகக்கோப்பை தொடரின் அரையிறுதியில் இந்தியா தோல்வியடைந்தது.
சென்னை,
சென்னையில் நடைபெற்று வரும் உலக கோப்பை ஸ்குவாஷ் போட்டியில், இரண்டாம் தரநிலையில் உள்ள இந்திய அணி சிறப்பாக விளையாடி அரையிறுதிக்கு முன்னேறியது.
அதன்படி, இன்று நடைபெற்ற அரையிறுதி சுற்றில் இந்திய அணி, மலேசியாவுடன் மோதியது. இதில் மலேசிய அணி 3-0 என இந்தியாவை வீழ்த்தியது. இந்திய வீரர் அபய் சிங்கை, மலேசிய வீரர் சாய் ஹங் 7-4, 5-7, 1-7, 7-1, 7-6 என்ற செட்கணக்கில் வீழ்த்தினார். இதேபோல் ஜோஸ்னா சின்னப்பாவை அயிரா ஆஸ்மேன் 7-3, 7-3, 5-7, 7-4 என்ற செட்கணக்கிலும், சவுரவ் கோசலை டேரன் பிரகாசம் 7-5, 2-7, 7-6, 6-5 என்ற செட்கணக்கிலும் வென்றனர்.
இதனால் மலேசிய அணி இறுதிசுற்றுக்கு முன்னேறியது. இதேபோல் மற்றொரு அரையிறுதி சுற்றில், நடப்பு சாம்பியனான எகிப்து அணி ஜப்பானை 4-0 என வீழ்த்தியது. நாளை நடைபெறும் இறுதிச்சுற்றில் மலேசியா, எகிப்து அணி பலப்பரீட்சை நடத்த உள்ளன.