ஆசிய விளையாட்டு: பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வி

ஆசிய விளையாட்டில் பேட்மிட்டன் போட்டியில் இந்தியாவின் பி.வி.சிந்து காலிறுதியில் தோல்வியடைந்துள்ளார்.

Update: 2023-10-05 04:27 GMT

ஹாங்சோவ்,

இந்திய மகளிர் பேட்மிட்டன் வீராங்கனையும் இரண்டுமுறை ஒலிம்பிக் பதக்கம் வென்றவருமான பி.வி.சிந்து ஆசிய விளையாட்டு போட்டியில் ஒற்றயர் பிரிவில் காலிறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்தார்.

காலிறுதியில் சீனாவின் பிங்ஜியாவ் ஹீயை எதிர்கொண்ட அவர், 2-0 என்ற நேர் செட்களில் தோல்வியடைந்தார். முதல் செட்டில் 21-16, இரண்டாவது செட்டில் 21-12 என்ற புள்ளிகள் கணக்கில் தோல்வியடைந்தார். இந்த ஆட்டம் 47 நிமிடங்களில் முடிவடைந்தது. மேலும் இந்த தோல்வியின் மூலம் அடுத்த சுற்றுக்கு முன்னேறாமல் வெளியேறினார்.

பி.வி.சிந்து இந்த ஆண்டு மட்டும் 7 தொடர்களில் முதல் சுற்றிலேயே வெளியேறியுள்ளார். இந்த ஆண்டு  இதுவரை எந்த தொடரையும் அவர் வெல்லவில்லை. இது அவருக்கு மோசமான ஆண்டாக அமைந்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்