ஆசிய விளையாட்டு போட்டிகள்: பதக்க பட்டியலில் 5வது இடத்திற்கு முன்னேறிய இந்தியா...!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் பதக்க பட்டியலில் இந்தியா 5வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களுடன் பட்டியலில் 5ம் இடத்திற்கு இந்தியா முன்னேறியுள்ளது.
ஆசிய விளையாட்டு தொடரில் துடுப்பு படகு போட்டியில் 2 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களையும், துப்பாக்கிச்சூடுதல் போட்டியில் 1 தங்கம், 1 வெள்ளி, 3 வெண்கலம் பதக்கங்களையும், கிரிக்கெட் போட்டியில் 1 தங்கப்பதக்கம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 5ம் இடத்தில் உள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகள்: இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்...!
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இன்று நடைபெற்ற பெண்கள் டி20 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் இந்தியா - இலங்கை மோதின. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 116 ரன்கள் சேர்த்தது. இதனை தொடர்ந்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 97 ரன்கள் மட்டும் எடுத்தது.
இதன் மூலம் இலங்கையை 19 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி தங்கப்பதக்கம் வென்றது.
இதன் மூலம் ஆசிய விளையாட்டு போட்டிகள் தொடரில் இந்தியாவுக்கு 2வது தங்கப்பதக்கம் கிடைத்துள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா 2 தங்கம், 3 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 11 பதக்கங்களை வென்றுள்ளது.
இந்தியாவுக்கு 2-வது தங்கம் கிடைக்குமா?
ஆசிய விளையாட்டு தொடரில் இந்திய அணிக்கு 2-வது தங்கம் கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. மகளிர் கிரிக்கெட் இறுதி ஆட்டத்தில் இலங்கை அணியை தோற்கடிக்கும் பட்சத்தில் இந்திய அணி தங்கம் வெல்லும். தற்போது 117 ரன்கள் இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்து வரும் நிலையில், இலங்கையை வீழ்த்தி தங்கம் வெல்லும் முனைப்புடன் இந்திய வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர்.
ஆசிய விளையாட்டு போட்டி: இலங்கைக்கு வெற்றி இலக்காக 117 ரன்களை நிர்ணயித்தது இந்தியா
ஆசிய விளையாட்டு போட்டி விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது நாளான இன்று மகளிர் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இந்தியாவும் இலங்கையும் இதில் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இதன்படி, இலங்கை அணி முதலில் பந்து வீசியது. இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 116 ரன்கள் எடுத்துள்ளது. இதையடுத்து 117 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இலங்கை அணி பேட்டிங் செய்து வருகிறது.
டென்னிஸ்: ஆடவர் இரட்டையர் பிரிவில் போபன்னா/ பாம்ப்ரி ஜோடி வெளியேற்றம்
ஆசிய விளையாட்டு தொடரில் இன்று நடைபெற்ற ஆடவர் இரட்டையர் பிரிவு டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் ரோஹன் போபன்னா /யுகி பாம்ப்ரி ஜோடி, உஸ்பெஸ்கிஸ்தானின் செர்கே போமின் மற்றும் குமோயுன் சுல்தானோவ் ஜோடியை எதிர்த்து விளையாடியது. பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் 3-6, 3-6 என்ற செட் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்து போட்டி தொடரில் இருந்து வெளியேற்றப்பட்டது.
ஆடவர் 25 மீட்டர் ரேபிட் ஃபயர் பிஸ்டல் பிரிவு போட்டியில் இந்தியாவின் விஜய்வீர் வெளியேற்றப்பட்டார். 3/5 என்ற கணக்கில் 21 புள்ளிகள் பெற்ற விஜய்வீர் நான்காவது இடத்திற்கு தள்ளப்பட்டார். அவருடன் போட்டி போட்ட யாங்பன் ( 24 புள்ளிகள்) 5/5 என ஸ்கோர் செய்து 3 பேர் கொண்ட இறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
டென்னிசில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ருதுஜா போஸ்லே கஜகஸ்தான் வீராங்கனையை 7-6, 6-2 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்
ஆசிய விளையாட்டு: இலங்கைக்கு எதிரான இறுதிப்போட்டி: இந்தியா முதலில் பேட்டிங்
துப்பாக்கிச் சுடுதல் 25 மீட்டர் ரேபிட் பயர் பிஸ்டல் சுற்றில் இந்தியாவின் விஜய் வீர் சித்து இறுதிப்போட்டிக்குள் நுழைந்தார்.