கால்பந்து:
கால்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் குரூப் பி சுற்றின் 7வது போட்டியில் இந்தியா - தாய்லாந்து அணிகள் மோதின. இதில், இந்தியாவை 0-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி தாய்லாந்து வெற்றிபெற்றது. கடைசி வரை போராடிய இந்திய அணி தோல்வியடைந்தது.
வாள் வீச்சு
வாள் வீச்சு விளையாட்டில் ஆண்கள் பிரிவில் இந்தியர்கள் யாரும் அடுத்த சுற்றுக்கு தகுதி பெறவில்லை. அதேபோல், பெண்கள் வாள் வீச்சு போட்டியில் இபெ ஒற்றையர் பிரிவில் காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை தனிக்ஷா ஹாத்ரி தோல்வியடைந்தார்.
இஸ்போர்ட்ஸ்
ஆசிய விளையாட்டு இஸ்போர்ட்ஸ் எப் சி ஆன்லைன் ரவுண்ட் ஆப் 32 போட்டி 5ல் இந்திய வீரர் சரண் ஜித் சிங் தோல்வியடைந்தார். இஸ்போர்ட்ஸ் எப் சி ஆன்லைன் ரவுண்ட் ஆப் 32 போட்டி 14ல் இந்திய வீரர் தோல்வியடைந்தார்.
இஸ்போர்ட்ஸ் எப் சி ஆன்லைன் லூசர்ஸ் பிரகெட் ரவுண்ட் 1 போட்டி 3ல் இந்திய வீரர் சரண் ஜித் சிங் வெற்றிபெற்றார். இதே பிரிவில் ரவுண்ட் 1 போட்டி 7ல் இந்திய வீரர் சரண் ஜித் சிங் வெற்றிபெற்றார்.
பெண்கள் கிரிக்கெட் போட்டி: பாகிஸ்தானை வீழ்த்தி இறுதிப்போட்டியில் இந்தியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது இலங்கை
ஆண்கள் கைப்பந்து போட்டி: ஜப்பானிடம் 3-0 என்ற செட் கணக்கில் இந்திய அணி தோல்வி
பெருமை அளிக்கிறது -வெள்ளி பதக்கம் வென்ற பிறகு இந்திய வீரர் பேட்டி
துடுப்பு படகு போட்டியில் இந்திய அணி வெள்ளி பதக்கம் வென்றது. இது குறித்து பேசிய இந்திய வீரர் புனித் குமார், வெள்ளி பதக்கம் வென்றது மிகவும் பெருமை அளிக்கிறது. 2019-ஆம் ஆண்டு முதலே இதற்காக (வெள்ளி பதக்கம்) கடுமையாக உழைத்துள்ளோம்” என்றார்.
டேபிள் டென்னிஸ்; காலிறுதிக்குள் நுழைந்தது இந்திய ஆடவர் அணி
டேபிள் டென்னிஸ் போட்டியில் கஜகஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் காலிறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேறியுள்ளது. இந்தியாவின் சரத் கமல் , கஜகஸ்தானின் கென்சிகுலோவ்- ஐ 5-11, 7-11, 11-9, 11-8, 11-9 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
குத்துச்சண்டை: 54 கிலோ பிரிவு தொடக்கப் போட்டியில் RSC (Referee Stops Contest) மூலம் ஜோர்டானிய வீராங்கனையை 0-0 என்ற கணக்கில் ப்ரீத்தி தோற்கடித்தார்.
பெண்கள் ரக்பி செவன்ஸ்: இந்தியா தனது முதல் குரூப் ஸ்டேஜ் ஆட்டத்தில் ஹாங்காங்கிடம் 0-38 என்ற கணக்கில் தோல்வியடைந்தது.
டேபிள் டென்னிஸ் ஆண்கள் அணியில் சுமித் நாகல் 2-0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.