துளிகள்

இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது.

Update: 2017-08-06 19:38 GMT

*லண்டனில் நடந்து வரும் உலக தடகள போட்டியில் பெண்களுக்கான 400 மீட்டர் ஓட்டத்தின் தகுதி சுற்றில் இந்திய வீராங்கனை நிர்மலா ஷிரான் 52.01 வினாடிகளில் இலக்கை கடந்ததுடன் தனது பிரிவில் 4–வது இடத்தை பிடித்து அரைஇறுதிக்கு முன்னேறியுள்ளார்.

*புரோ கபடி லீக் போட்டியில் நாக்பூரில் நேற்று நடந்த ஆட்டங்களில் (பி பிரிவு) பெங்கால் வாரியர்ஸ் 40–20 என்ற புள்ளி கணக்கில் உத்தரபிரதேச யோத்தாவும், பாட்னா பைரட்ஸ் 46–32 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சையும் வீழ்த்தியது. போட்டியில் இன்று ஓய்வு நாளாகும்.

*இங்கிலாந்து – தென்ஆப்பிரிக்கா அணிகள் இடையிலான 4–வது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மான்செஸ்டரில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் முறையே இங்கிலாந்து 362 ரன்களும், தென்ஆப்பிரிக்கா 226 ரன்களும் எடுத்தன. 136 ரன்கள் முன்னிலையுடன் 3–வது நாளான நேற்று 2–வது இன்னிங்சை ஆடிய இங்கிலாந்து அணி ஆட்ட நேர முடிவில் 8 விக்கெட்டுக்கு 224 ரன்கள் எடுத்து மொத்தம் 360 ரன்கள் முன்னிலை பெற்றிருக்கிறது. 4–வது நாள் ஆட்டம் இன்று நடைபெறும்.

மேலும் செய்திகள்