நியாயமற்ற போரை உடனடியாக நிறுத்துங்கள்: புதினுக்கு வேண்டுகோள் விடுக்கும் கால்பந்து ஜாம்பவான்

உக்ரைன் மீதான போரை உடனடியாக நிறுத்துமாறு புதினுக்கு கால்பந்து ஜாம்பவான் பீலே வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Update: 2022-06-02 01:26 GMT
கோப்புப்படம் 

சா பாலோ,

உக்ரைன் மீதான தனது "பொல்லாத" மற்றும் "நியாயமற்ற" படையெடுப்பை முடிவுக்குக் கொண்டுவருமாறு பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே, ரஷிய அதிபர் விளாடிமிர் புடினிடம் பொது வேண்டுகோள் விடுத்தார். உலகக் கோப்பை கால்பந்து தகுதிச் சுற்று ஆட்டத்தில் உக்ரைனின் தேசிய அணி விளையாடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, அவர் இதனை தெரிவித்தார்.

இது குறித்து இன்ஸ்டாகிராமில் பீலே கூறுகையில், "இந்தப் படையெடுப்பை நிறுத்துங்கள்."இந்த மோதல் பொல்லாதது, நியாயப்படுத்த முடியாதது மற்றும் வலி, பயம், மற்றும் வேதனையைத் தவிர வேறெதையும் கொண்டுவருவதில்லை." என்று அவர் கூறியுள்ளார்.

பீலேவும், புடினும் கடைசியாக மாஸ்கோவில் 2017 இல் உலகக் கோப்பைக்கு முன் நடைபெற்ற கான்ஃபெடரேஷன் கோப்பையின் போது சந்தித்தனர். ரஷிய அதிபர் புதினும், பீலேவை தனக்கு பிடித்த வீரர்களில் ஒருவர் என கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Tags:    

மேலும் செய்திகள்