ஐ.எஸ்.எல். கால்பந்து: சென்னை அணி 3-வது தோல்வி
கொச்சியில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.;
கொச்சி,
13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொச்சியில் நேற்றிரவு நடந்த லீக் ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. அணிகள் மோதின.
இந்த ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் ஜீசஸ் ஜிமெனெஸ் ஆட்டத்தின் 56-வது நிமிடத்திலும், நோவா 70-வது நிமிடத்திலும், ராகுல் 90+2வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் 3-0 என்ற கோல் கணக்கில் சென்னையின் எப்.சி. அணியை தோற்கடித்தது.
9-வது ஆட்டத்தில் ஆடிய சென்னையின் எப்.சி. சந்தித்த 3-வது தோல்வி இதுவாகும். கேரளாவுக்கு இது 3-வது வெற்றியாகும்.