மாநில கால்பந்து போட்டி

மாநில கால்பந்து போட்டி நடந்தது

Update: 2022-10-01 21:26 GMT

விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் முதலியார்பட்டி ஜெயராம் புட்பால் கிளப் நடத்தும் 40-வது மாநில அளவிலான கால்பந்தாட்ட போட்டி கடந்த 23-ந் தேதி முதல் நடைபெற்று வருகிறது. போட்டியில் நெல்லை, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, மதுரை, தேனி மாவட்டங்களை சேர்ந்த 15-க்கும் மேற்பட்ட அணிகள் விளையாடி வருகின்றன. நேற்று நடைபெற்ற முதலாவது அரையிறுதி போட்டியில் ஆறுமுகம்பட்டி அணியும், தென்காசி அணியும் மோதின. இதில் ஆறுமுகம்பட்டி அணி ஒரு கோல் போட்டு வெற்றி பெற்றது.

முன்னதாக நடந்த நிகழ்ச்சிக்கு சிவந்திபுரம் பஞ்சாயத்து தலைவர் ஜெகன் தலைமை தாங்கினார். மாநில கால்பந்து தலைவர் சுரேஷ் தொடங்கி வைத்தார். இரண்டாவது போட்டியில் மதுரை அணியும் நாகர்கோவில் அணியும் விளையாடியது. இந்த போட்டியை தட்சணமாற நாடார் சங்க தலைவர் காளிதாஸ் தலைமை தாங்கி தொடங்கி வைத்தார். அவருடன் சங்க இயக்குனர் வைத்திலிங்கம், அகஸ்தீஸ்வரன், பாவூர்சத்திரம் பெருந்தலைவர் காமராஜர் மார்க்கெட் செயலாளர் நாராயண சிங்கம் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இதில் விளையாட்டு ஆலோசகர்கள், ஜெயராம், மனோகரன் சாமுவேல், அருளானந்தம், ரமேஷ் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.

போட்டி ஏற்பாடுகளை தலைவர் பூபதி, செயலாளர் தவசி, பொருளாளர் மாரியப்பன் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் ஊர்மக்கள் செய்து வருகின்றனர்.

அரைஇறுதி போட்டியில் வெற்றி பெற்ற ஆறுமுகம்பட்டி அணியும், நாகர்கோவில் அணியும் இன்று (ஞாயிற்றுக்கிழமை) இறுதிப்போட்டியில் விளையாடுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்