ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; சென்னை - மும்பை ஆட்டம் 'டிரா'

11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது.;

Update:2024-11-09 19:58 IST

Image Courtesy: @IndSuperLeague / @ChennaiyinFC

சென்னை,

13 அணிகள் இடையிலான 11-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி. - நடப்பு சாம்பியன் மும்பை சிட்டி எப்.சி அணிகள் மோதின.

கடந்த 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட ஐ.எஸ்.எல். கால்பந்து வரலாற்றில், இது 1,000-வது ஆட்டம் என்பது கூடுதல் சிறப்பாகும். ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணிகளும் கோல் அடிக்காததால் முதல் பாதி 0-0 என முடிந்தது.

தொடர்ந்து நடைபெற்ற 2வது பாதி ஆட்டத்தில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க தீவிர முயற்சி செய்தனர். அதற்கு பலனாக இரு அணிகளும் தலா ஒரு கோல் அடித்தன. சென்னை 60வது நிமிடத்திலும், மும்பை 63வது நிமிடத்திலும் கோல் அடித்தன. இதனால் ஆட்டம் 1-1 என சமன் ஆனது. இதையடுத்து இரு அணி வீரர்களும் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.

இறுதியில் இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது. இதையடுத்து கொல்கத்தாவில் நடைபெற்று வரும் மற்றொரு ஆட்டத்தில் ஈஸ்ட் பெங்கால் எப்.சி. - முகமதன் எஸ்.சி அணிகள் ஆடி வருகின்றன.

Tags:    

மேலும் செய்திகள்