தெற்காசிய கால்பந்து போட்டி: பூடானை வீழ்த்தி லெபனான் 2-வது வெற்றி
8 அணிகள் இடையிலான 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது.
பெங்களூரு,
8 அணிகள் இடையிலான 14-வது தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் 'பி' பிரிவில் நேற்றிரவு அரங்கேறிய ஒரு ஆட்டத்தில் லெபனான் 4-1 என்ற கோல் கணக்கில் பூடானை வீழ்த்தி 2-வது வெற்றியுடன் அரைஇறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்திக் கொண்டது.
லெபனான் அணியில் முகமது சடேக், அலி அல் ஹஜ், கலில் படேர், மேதி ஸின் ஆகியோர் கோல் போட்டனர். மற்றொரு ஆட்டத்தில் வங்காளதேசம் 3-1 என்ற கோல் கணக்கில் மாலத்தீவை தோற்கடித்து முதலாவது வெற்றியை பெற்றது.
போட்டியில் இன்று ஓய்வு நாளாகும். 'ஏ' பிரிவில் நாளை நடக்கும் கடைசி லீக் ஆட்டங்களில் பாகிஸ்தான்-நேபாளம், குவைத்-இந்தியா அணிகள் மோதுகின்றன.