ஐ.எஸ்.எல். கால்பந்து தொடர்; கேரளா பிளாஸ்டர்ஸ் அணிக்கு அதிர்ச்சி அளித்து வெற்றியை பதிவு செய்த பஞ்சாப் எப்.சி
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.;
கொச்சி,
12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு கொச்சியில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் - பஞ்சாப் எப்.சி. அணிகள் மோதின.
இதில் ஆட்டத்தின் 39வது நிமிடத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் முதல் கோல் அடித்து முன்னிலை பெற்றது. இதையடுத்து முதல் பாதி ஆட்டம் முடியும் தருவாயில் ஆட்டத்தின் 42வது நிமிடத்தில் பஞ்சாப் அணி பதில் கோல் திருப்பியது. இதையடுத்து முதல் பாதி ஆட்டம் 1-1 என சமனில் முடிந்தது.
தொடர்ந்து நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தில் பஞ்சாப் அணி (61 மற்றும் 88வது நிமிடம்) இரு கோல் அடித்தது. இரண்டாவது பாதி ஆட்டத்தில் கேரளா பிளாஸ்டர்ஸ் கோல் அடிக்க எடுத்த முயற்சிகளுக்கு பலன் கிடைக்கவில்லை. இறுதியில் ஆட்ட நேர முடிவில் பஞ்சாப் அணி 3-1 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ்க்கு அதிர்ச்சி அளித்து வெற்றியை பதிவு செய்தது.