தூரந்த் கோப்பை கால்பந்து; மோகன் பகான் கால்பந்து அணி அரையிறுதிக்கு முன்னேற்றம்
காலிறுதியில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி அரையிறுதிக்கு மோகன் பகான் முன்னேறியுள்ளது.;
கொல்கத்தா,
132-வது தூரந்த் கோப்பை கால்பந்து தொடர் மேற்கு வங்காளத்தில் நடைபெற்று வருகிறது. இதில் நடந்த காலிறுதி ஆட்டத்தில் மும்பை சிட்டி மற்றும் மோகன் பகான் அணிகள் மோதின. ஆட்டத்தின் 9-வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி மோகன் பகான் அணி முதல் கோல் அடித்தது. பின்னர் 28-வது நிமிடத்தில் மும்பை அணி பதில் கோல் போட்டு சமநிலைக்கு கொண்டு வந்தது. ஆனால் அது நீண்ட நேரம் நீடிக்கவில்லை 30-வது நிமிடத்தில் மோகன் பகான் அணி மேலும் ஒரு கோல் அடித்து முதல் பாதியில் முன்னிலை பெற்றது.
பின்னர் இரண்டாவது பாதியிலும் மோகன் பகான் அணி மேலும் ஒரு கோல் அடித்து முன்னிலை பெற்றது. அதன் பின் இரு அணியாலும் கோல் அடிக்க முடியவில்லை. இறுதியில் மோகன் பகான் அணி 3-1 என்ற கோல் கணக்கில் மும்பை சிட்டி அணியை வீழ்த்தி அரையிறுதி சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
அரையிறுதியில் மோகன் பகான் அணி கோவா அணியுடன் மோத உள்ளது.