அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு சஸ்பெண்டு; பிபா நடவடிக்கை

மூன்றாம் தரப்பினரின் தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு உடனடியாக சஸ்பெண்டு செய்யப்படுகிறது என பிபா வெளியிட்டுள்ள அறிக்கை தெரிவிக்கின்றது.

Update: 2022-08-16 01:51 GMT



ஜூரிச்,



சர்வதேச கால்பந்து கூட்டமைப்பு சம்மேளனம் (பிபா) வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், மூன்றாம் தரப்பினரின் அத்துமீறிய தலையீட்டால் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பை உடனடியாக சஸ்பெண்டு செய்வது என பிபா கவுன்சில் ஒருமித்த முடிவு எடுத்து உள்ளது.

இந்த தலையீடானது, பிபா அமைப்பின் விதிகளை மீறிய தீவிர செயல் என கருதப்படுகிறது என்றும் அறிக்கை தெரிவிக்கின்றது. இதனால், வருகிற அக்டோபர் 11-ந்தேதி முதல் 30-ந்தேதி வரையில் இந்தியாவில் நடைபெற திட்டமிடப்பட்ட 17 வயதுக்கு உட்பட்டோருக்கான பிபா மகளிர் உலக கோப்பை 2022 கால்பந்து போட்டிகள், திட்டமிட்டபடி இந்தியாவில் நடத்தப்பட இயலாது என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

போட்டி தொடர் நடத்துவதற்கான அடுத்த வழிமுறைகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகிறது என தெரிவித்துள்ள பிபா அமைப்பு, எப்போது தேவைப்படுமோ அப்போது, அதுபற்றி கவுன்சிலுக்கு தெரிவிக்கப்படும் என்றும் பிபா தெரிவித்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்