அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தேர்தலில் மாநில அளவில் முன்னாள் இந்திய வீரர்களும் வாக்களிக்கும் உரிமை

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தேர்தலில் மாநில அளவில் முன்னாள் இந்திய வீரர்களும் வாக்களிக்கும் உரிமை அளிக்கப்பட உள்ளது.

Update: 2022-07-12 09:34 GMT

புதுடெல்லி:

அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு தேர்தலில் மாநில அளவில் முன்னாள் இந்திய வீரர்களும் வாக்களிக்கும் உரிமை அளிக்க விரும்புகிறது. இந்திய கிரிக்கெட் வாரியம் (பிசிசிஐ) ஏற்கனவே அதன் முன்னாள் சர்வதேச வீரர்களுக்கு மாநில அளவிலான தேர்தல்களில் வாக்களிக்கும் உரிமையை கட்டாயப்படுத்தியுள்ளது,அதே நடைமுறையை அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் பின்பற்ற உள்ளது.

இதனை தொடர்ந்து அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பு ஒரு சுற்றறிக்கையில் அனைத்து முன்னாள் இந்திய சர்வதேச வீரர்களிடமிருந்தும் இது குறித்த விவரங்களைக் கேட்டுள்ளது, அவர்கள் தேசிய அளவில் ஐந்து போட்டிகளில் விளையாடி இருக்க வேண்டும். குறைந்தது இரண்டு வருடங்களாவது கால்பந்து போட்டிகளில் பங்கு பெற்றவர்களாக இருக்க வேண்டும் என கூறி உள்ளது.

இது குறித்து ஒரு மூத்த அதிகாரி கூறியதாவது:-

"நிர்வாக அமைப்பில் அதிகமான முன்னாள் கால்பந்து வீரர்களைக் கொண்டிருக்க வேண்டும் என்பது திட்டம். ஒரு வீரர் தனது 38வது வயதில் கிளப் கால்பந்தில் இருந்து ஓய்வு பெற்று, இந்தியாவுக்காக ஐந்து முழு சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார் என்று வைத்துக்கொள்வோம். பின்னர் 40 வயதில், அவர் குறைந்தபட்சம் ஒரு மாநில அமைப்பின் ஒரு பகுதியாக இருக்க தகுதியுடையவராக இருப்பார் என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்