ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இயக்குனர் ஹாமில்டன் மசகட்சா ராஜினாமா
டி20 உலகக்கோப்பை தொடருக்கு ஜிம்பாப்வே தகுதி பெறாத காரணத்தினால் பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.;
ஹராரே,
ஜிம்பாப்வே கிரிக்கெட் அணியின் இயக்குனர் ஹாமில்டன் மசகட்சா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். ஜிம்பாப்வே அணி இந்த ஆண்டு நடைபெற உள்ள டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. ஆப்பிரிக்கா பிராந்திய தகுதிச்சுற்றில் உகாண்டா மற்றும் நமீபியாவிடம் தோல்வியடைந்த ஜிம்பாப்வே புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தை பிடித்தது.
உலகப்போட்டிக்குத் தகுதி பெற முதல் இரண்டு இடங்களைப் பிடிப்பது அவசியம். எனவே மூன்றாம் இடம் பிடித்த ஜிம்பாப்வே அணி டி20 உலகக்கோப்பை தொடருக்கு தகுதி பெறவில்லை. மேலும் சமீப காலமாக ஜிம்பாப்வே அணியின் செயல்பாடுகள் பெரிய அளவில் இல்லை. இதன் காரணமாக கடந்த 4 ஆண்டுகளாக அந்த அணியின் இயக்குனராக பதவி வகித்து வந்த ஹாமில்டன் மசகட்சா, தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.