'ஆஸ்திரேலிய மண்ணில் இவரை நீங்கள் எதிர்கொள்வீர்கள் ஸ்டீவ் சுமித்' - இந்திய இளம் வீரரை புகழ்ந்த பிராட்

ஆஸ்திரேலிய மண்ணில் மயங்க் யாதவை நீங்கள் எதிர்கொள்வீர்கள் என்று ஸ்டீவ் சுமித்திடம் தெரிவித்ததாக பிராட் கூறியுள்ளார்.

Update: 2024-04-03 10:00 GMT

லக்னோ,

10 அணிகள் பங்கேற்றுள்ள 17-வது ஐ.பி.எல். சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதில் சில இளம் இந்திய வீரர்கள் அசத்தி வருகின்றனர். குறிப்பாக ராஜஸ்தான் அணியில் ரியான் பராக், லக்னோ அணியில் மயங்க் யாதவ் , கொல்கதா அணியில் ஹர்ஷித் ராணா குறிப்பிடத்தக்கவர்கள்.

இதில் லக்னோ அணிக்காக இந்த வருடம் அறிமுகமான இளம் வேகப்பந்து வீச்சாளரான மயங்க் யாதவ் இதுவரை விளையாடிய 2 போட்டிகளிலும் ஆட்டநாயகன் விருது வென்று அணியின் வெற்றியில் முக்கிய பங்காற்றியுள்ளார். அறிமுகம் ஆன முதலே 145- 155 கிலோமீட்டர் வேகத்தில் பந்து வீசும் இவருடைய திறனை பல முன்னாள் வீரர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் இந்தியாவுக்காக இன்னும் 18 மாதங்களில் மயங்க் யாதவ் விளையாடுவார் என்று ஸ்டுவர்ட் பிராட் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் 2024 - 25 பார்டர் – கவாஸ்கர் தொடரில் ஆஸ்திரேலிய மண்ணில் இவரை நீங்கள் எதிர்கொள்வீர்கள் என்று ஸ்டீவ் சுமித்திடம் தெரிவித்ததாகவும் ஸ்டுவர்ட் பிராட் கூறியுள்ளார். இது பற்றி ஸ்டார் அவர் பேசியது பின்வருமாறு:-

"இது ஒரு இளம் பவுலரிடம் நான் பார்த்த அற்புதமான அறிமுகமாகும். அவரது ரன் அப்பில் மிகவும் முன்னேற்றத்தை கொண்டுள்ளார். அவருடைய 156 கிலோமீட்டர் வேகம் என்னை கவர்ந்தது. அதை விட அவருடைய லைன் நம்ப முடியாததாக இருந்தது. சர்வதேச வீரர்களை திணறடிக்கும் வேகமும் தரமும் அவரிடம் இருக்கிறது. எனவே ஒரு வேகப்பந்து வீச்சாளராக தேடும் அனைத்து பண்புகளும் அவரிடம் உள்ளது.

இருப்பினும் ஒரு சில ஐ.பி.எல். போட்டிகளில் வெற்றியை பெற்றுக் கொடுத்ததற்காக நாம் அவர் மீது இப்போதே அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தக் கூடாது என்பதேஉண்மையாகும். வேகப்பந்து வீச்சுக்கு தடுமாறக்கூடிய பேட்டிங் வரிசையை கொண்ட அணிகளுக்கு எதிராக அவரை தேர்வு செய்யலாம். ஒரு போட்டியில் அவர் சோர்வடையலாம். ஆனால் அனைத்து விதமான கிரிக்கெட்டிலும் அசத்துவதற்கான திறமை அவரிடம் இருப்பதாக தெரிகிறது.

ஆஸ்திரேலிய மண்ணில் இந்தியா விளையாடும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கான திறமை அவரிடம் இருக்கிறதா? என்று கேட்டால் ஆம் உள்ளது. ஸ்டீவ் சுமித்தை பார்க்கும் போதெல்லாம் "நீங்கள் இந்தப் பையனை எதிர்கொள்வீர்கள்" என்று தெரிவித்து வருகிறேன். இருப்பினும் நம்முடைய எதிர்பார்ப்பை அதிகமாக வைக்க கூடாது. ஆனால் 18 மாதங்களில் அவர் இந்தியாவுக்காக அறிமுகமாவதை நாம் பார்ப்போம் என்று நினைக்கிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்