உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்..டீம் ஆப் தி டோர்னாமெண்டை அறிவித்த கிரிக்கெட் ஆஸ்திரேலியா - 3 இந்திய வீரர்களுக்கு இடம்...!
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் டீம் ஆப் தி டோர்னாமென்ட்டை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது.
துபாய்,
2வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப்போட்டி வரும் 7ம் தேதி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோத உள்ளன. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி 2019-ல் அறிமுகப்படுத்தப்பட்டது. சவுத்தாம்ப்டனில் நடந்த முதல் டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி சாம்பியன் ஆனது.
தற்போது 2-வது டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இந்தியா விளையாட உள்ளது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி சாம்பியன் பட்டத்தை வெல்லுமா என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் டீம் ஆப் தி டோர்னாமென்ட்டை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. இந்த அணியில் 3 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர். ஆச்சரியம் அளிக்கும் வகையில் விராட் கோலிக்கு அணியில் இடம் இல்லை.
இந்த அணிக்கு ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கிரிக்கெட் ஆஸ்திரேலியா அறிவித்துள்ள அணி:
உஸ்மான் கவாஜா, திமுத் கருணாரத்னே, பாபர் ஆசம், ஜோ ரூட், டிராவிஸ் ஹெட், ரவீந்திர ஜடேஜா, ரிஷப் பண்ட், ரவிச்சந்திரன் அஷ்வி, பேட் கம்மின்ஸ் (கேப்டன்), ஜிம்மி ஆண்டர்சன், ககிசோ ரபடா.