உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி: 3-வது நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி 123/4 ரன்கள் சேர்ப்பு

ஆஸ்திரேலிய அணி 3-வது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

Update: 2023-06-09 18:13 GMT

Image Courtesy : @BCCI twitter

லண்டன்,

ஐ.சி.சி. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி லண்டனில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற 3-வது நாள் அட்டத்தில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை 296 ரன்களுக்குள் ஆல் அவுட் செய்தது. முன்னதாக ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 469 ரன்கள் குவித்திருந்தது, இதை எடுத்து 173 ரன்கள் முன்னிலையுடன் களமிறங்கியது.

ஆஸ்திரேலிய அணியில் தொடக்கத்தில் வார்னர்(1) மற்றும் கவாஜா(13) அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர். இதையடுத்து அணியில் ஸ்டீவன் ஸ்மித் மற்றும் லபுஸ்சன் நிதானமாக விளையாடினர். ஸ்மித் 34 ரன்கள் எடுத்த நிலையில் ஜடேஜாவிடம் விக்கெட்டை இழந்தார். இத்துடன் அவர் டெஸ்ட் போட்டிகளில் ஜடேஜாவிடம் 8-வது முறையாக விக்கெட்டை இழக்கிறார்.

இதையடுத்து களம் இறங்கிய டிராவிஸ் ஹெட் முதல் இன்னிங்ஸில் சதம் அடித்திருந்த நிலையில் இந்த முறை 18 ரன்களில் ஜடேஜா வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். தற்போது ஆஸ்திரேலிய அணி மூன்றாவது நாள் ஆட்ட நேர முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 123 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.

லபுஸ்சன் 41 ரன்களும், க்ரீன் 7 ரன்களும் எடுத்து விளையாடி வருகின்றனர். இந்தியா சார்பில் ஜடேஜா 2 விக்கெட்களும், சிராஜ் மற்றும் உமேஷ் தலா 1 விக்கெட்டும் எடுத்துள்ளனர். ஆஸ்திரேலிய அணி 295 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 

Tags:    

மேலும் செய்திகள்