உலகக்கோப்பை கிரிக்கெட்; 2வது வெற்றியை பதிவு செய்வது யார்..? - நெதர்லாந்து - வங்காளதேசம் அணிகள் இன்று மோதல்...!

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-10-28 03:42 GMT

கொல்கத்தா,

50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் 2வது லீக் ஆட்டத்தில் நெதர்லாந்து - வங்காளதேசம் அணிகள் மோத உள்ளன.

இரு அணிகளும் 5 ஆட்டங்களில் ஆடி தலா 1 வெற்றி, 4 தோல்வி கண்டுள்ளன. இந்த ஆட்டத்தில் தோல்வி அடையும் அணியின் அரையிறுதி வாய்ப்பு கிட்டத்தட்ட முடிந்துவிடும் என்பதால் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும் என்பதால் ஆட்டத்தில் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது. ஆட்டம் இந்திய நேரப்படி மதியம் 2 மணிக்கு தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்