உலகக்கோப்பை கிரிக்கெட்; தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்திலிருந்து விலகும் வேகப்பந்து வீச்சாளர்...? - நெருக்கடியில் பாகிஸ்தான்

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோத உள்ளன.

Update: 2023-10-27 04:11 GMT

Image Courtesy: AFP

சென்னை,

10 அணிகள் கலந்து கொண்டுள்ள 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியாவில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இதுவரை நடந்து முடிந்துள்ள லீக் ஆட்டங்களின் முடிவில் இந்தியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து, ஆஸ்திரேலியா அணிகள் முதல் 4 இடங்களில் உள்ளன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெறும் மிக முக்கியமான ஆட்டத்தில் பாகிஸ்தான் அணி தென் ஆப்பிரிக்காவை சென்னையில் எதிர்கொள்கிறது. 5 ஆட்டங்களில் ஆடியுள்ள பாகிஸ்தான் 2 வெற்றி, 3 தோல்வி பெற்று 4 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் 6-வது இடத்தில் உள்ளது.

அரையிறுதி சுற்றுக்கு முன்னேற எஞ்சியுள்ள அனைத்து ஆட்டங்களிலும் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நெருக்கடியில் பாகிஸ்தான் ஆட உள்ளது. இந்நிலையில் பாகிஸ்தான் அணிக்கு பெரும் பின்னடைவாக அந்த அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஹசன் அலி இன்று நடைபெறும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது.

ஹசன் அலி காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஆனால் அவர் குணமடைந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாகிஸ்தானுக்காக சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ஹசன் அலி 5 ஆட்டங்களில் 8 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்