பெண்கள் ஒருநாள் கிரிக்கெட்: இந்தியாவுக்கு எதிராக டாஸ் வென்ற வங்கதேசம் பேட்டிங் தேர்வு...!
நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என தொடர் சமனில் உள்ளது.
டாக்கா,
இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி வங்கதேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலாவதாக நடைபெற்ற டி20 தொடரை 2-1 என்ற கணக்கில் இந்திய பெண்கள் கிரிக்கெட் அணி கைப்பற்றியது.
இதையடுத்து நடைபெற்று வரும் ஒருநாள் தொடரில் 2 போட்டிகள் நிறைவடைந்த நிலையில் 1-1 என ஒருநாள் தொடர் சமனில் உள்ளது. இந்நிலையில் தொடர் யாருக்கு என்பதை தீர்மானிக்கும் 3வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற உள்ளது.
இந்நிலையில் இந்த ஆட்டத்துக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற வங்கதேச அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்துள்ளது.