மகளிர் கிரிக்கெட்: மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடம் பிடித்த பியூமண்ட்

அயர்லாந்துக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் பியூமண்ட் 150 ரன்கள் குவித்தார்.

Update: 2024-09-09 14:25 GMT

image courtesy: ICC

பெல்பாஸ்ட்,

இங்கிலாந்து கிரிக்கெட் அணி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு தலா 3 போட்டிகள் கொண்ட டி20 மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாடி வருகிறது. இதில் இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

அதன்படி நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2-வது ஒருநாள் போட்டி பெல்பாஸ்ட்டில் இன்று நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 320 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக தொடக்க ஆட்டக்காரர் பியூமண்ட் 150 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் பியூமண்ட் (10 சதங்கள்) மகளிர் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீராங்கனைகளின் மாபெரும் சாதனை பட்டியலில் 3-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார்.

அந்த பட்டியல்:-

1.மெக் லானிங் - 15 சதங்கள்

2. சுசி பேட்ஸ் - 13 சதங்கள்

3. பியூமண்ட் - 10 சதங்கள்

4. சமாரி அத்தபத்து/ சார்லட் எட்வர்ட்ஸ்/ நட் ஸ்கிவர் பிரண்ட் - 9 சதங்கள்

321 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து தற்போது வரை 27 ரன்களுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

Tags:    

மேலும் செய்திகள்