அரைஇறுதிக்குள் நுழையுமா பாகிஸ்தான்? நெதர்லாந்து அணியுடன் இன்று மோதல்

இன்றைய ஆட்டத்தில் தோற்றால் பாகிஸ்தான் அணியின் அரைஇறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போய்விடும்.

Update: 2022-10-30 00:46 GMT

Image Courtesy : ANI

பெர்த்,

20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட்டில் பெர்த்தில் இன்று நடக்கும் ஆட்டத்தில் பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான்-ஸ்காட் எட்வர்ட்ஸ் தலைமையிலான நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

பாகிஸ்தான் அணி தனது முதலாவது ஆட்டத்தில் இந்தியாவிடமும், 2-வது ஆட்டத்தில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஜிம்பாப்வேயிடமும் பணிந்தது. இதேபோல் நெதர்லாந்து அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களில் வங்காளதேசம், இந்தியாவிடம் அடுத்தடுத்து தோல்வி கண்டு தனது பிரிவில் கடைசி இடத்தில் உள்ளது.

இந்த ஆட்டம் பாகிஸ்தான் அணிக்கு வாழ்வா? சாவா? போராட்டமாகும். இந்த ஆட்டத்தில் தோற்றால் அந்த அணியின் அரைஇறுதி வாய்ப்பு முற்றிலும் முடிந்து போய்விடும். இனிவரும் ஆட்டங்கள் அனைத்திலும் பாகிஸ்தான் அணி வெற்றி பெறுவதுடன், மற்ற ஆட்டங்களின் முடிவுகளும் சாதகமாக அமைந்தால் மட்டுமே அந்த அணி அரைஇறுதி வாய்ப்பில் நீடிக்க முடியும்.

இவ்விரு அணிகளும் ஒரே ஒரு முறை 20 ஓவர் போட்டியில் நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. அந்த ஆட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி கண்டது. இந்த தொடரில் சரிவை சந்தித்ததால் விமர்சனத்துக்கு ஆளாகி இருக்கும் பாகிஸ்தான் பலமாக மீண்டு அசத்தினால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Tags:    

மேலும் செய்திகள்