துலீப் கோப்பை தொடரில் விளையாட தேர்வு செய்யப்படாதது ஏன்..? ரிங்கு சிங் விளக்கம்

அடுத்த சுற்று போட்டிகளில் தாம் தேர்ந்தெடுக்கப்படலாம் என்று ரிங்கு சிங் கூறியுள்ளார்.

Update: 2024-08-19 23:45 GMT

image courtesy: AFP

கராச்சி,

இந்தியாவில் நடைபெறும் உள்ளூர் டெஸ்ட் தொடரான துலீப் கோப்பை கிரிக்கெட் (4 நாள் ஆட்டம்) தொடர் செப்டம்பர் -5ம் தேதி தொடங்க உள்ளது. இந்த போட்டியில் முதல் சுற்றுக்கான அணி பட்டியல் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. 'ஏ' அணிக்கு சுப்மன் கில், 'பி' அணிக்கு அபிமன்யு ஈஸ்வரன், 'சி' அணிக்கு ருதுராஜ் கெய்க்வாட், 'டி' அணிக்கு ஸ்ரேயாஸ் அய்யர் ஆகியோர் கேப்டன்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதில் ரிஷப் பண்ட், சூர்யகுமார் யாதவ், லோகேஷ் ராகுல், ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், சாய் சுதர்சன், ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள் விளையாடுகிறார்கள். கேப்டன் ரோகித் சர்மா, கோலி, ஜஸ்பிரித் பும்ரா, அஸ்வின் ஆகியோருக்கு இந்த போட்டியில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இருப்பினும் அந்த அணிகளில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரிங்கு சிங் தேர்வு செய்யப்படாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

இந்நிலையில் டி20 அளவுக்கு சமீபத்திய உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் தாம் அசத்தவில்லை என்று ரிங்கு சிங் கூறியுள்ளார். அதனாலேயே தம்மை தேர்வாளர்கள் துலீப் கோப்பையில் தேர்ந்தெடுக்காமல் விட்டிருக்கலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்ருமாறு:- "ஒன்றுமில்லை. நான் உள்ளூர் சீசனில் நன்றாக செயல்படவில்லை. மேலும் நான் நிறைய ரஞ்சிக் கோப்பை போட்டிகளிலும் விளையாடவில்லை. 2 - 3 போட்டிகளில் மட்டுமே விளையாடினேன். அந்த வகையில் நான் நன்றாக விளையாடாததாலேயே தேர்ந்தெடுக்கவில்லை. இருப்பினும் அடுத்த சுற்றுப் போட்டிகளில் நான் தேர்ந்தெடுக்கப்படலாம்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்