ஒரு இன்னிங்ஸ் போதும் - ரோகித் சர்மாவுக்கு ஆஸி.முன்னாள் கேப்டன் ஆதரவு

நடப்பு ஐ.பி.எல். தொடரில் ரோகித் சர்மா தடுமாற்றமாக விளையாடி வருகிறார்.;

Update:2025-04-13 16:45 IST

image courtesy:PTI

சிட்னி,

ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் 5 போட்டிகளில் விளையாடி ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9-வது இடத்தில் உள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணியின் இந்த தோல்விகளுக்கு ரோகித் சர்மா முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறார். அதிரடி தொடக்க ஆட்டக்காரர் ஆன நடப்பு சீசனில் தடுமாறி வருகிறார். 4 போட்டிகளில் விளையாடி வெறும் 38 ரன்கள் மட்டுமே அடித்து சொதப்பி வருகிறார். இதன் காரணமாக அவர் ஓய்வு பெற வேண்டும் என்று ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இந்நிலையில் ரோகித் சர்மா போன்ற வீரர் மீண்டும் பார்முக்கு வர ஒரு நல்ல இன்னிங்ஸ் மட்டுமே போதும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டனான மைக்கேல் கிளார்க் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "ரோகித் ஒரு முழுமையான சூப்பர் ஸ்டார் என்று நான் நினைக்கிறேன். அவர் சதம் அடிப்பதற்கு இன்னும் சிறிது காலம் ஆகலாம். அதற்கு ஒரு நல்ல இன்னிங்ஸ் போதும் என்று நினைக்கிறேன். ஒரு ஆட்டத்தில் அவர் 40 முதல் 60 ரன்கள் வரை கொண்ட இன்னிங்சை விளையாடிவிட்டால் அதன்பிறகு கிடைக்கும் உத்வேகத்தை வைத்து நிச்சயம் சதம் அடிப்பார். அதன் பிறகு, நீங்கள் ரோகித் சர்மாவின் சிறந்த பார்மை காண்பீர்கள். தற்சமயம் அவரது பார்மை பற்றி நான் அதிகம் கவலைப்பட மாட்டேன்" என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்