இறுதிப்போட்டிக்கு முன்னேறப்போவது யார்..? உ.பி வாரியர்ஸ்-க்கு 183 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது மும்பை அணி

பெண்கள் பிரீமியர் லீக்கில் இன்று நடைபெற்றுவரும் வெளியேறுதல் சுற்றில் உ.பி வாரியர்ஸ்- மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி வருகின்றன.

Update: 2023-03-24 15:45 GMT

மும்பை,

முதலாவது பெண்கள் பிரிமீயர் லீக் (டபிள்யூ.பி.எல்.) 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடந்து வருகிறது. 5 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் லீக் சுற்று முடிவில் டெல்லி கேப்பிட்டல்ஸ் (6 வெற்றி, 2 தோல்வி), மும்பை இந்தியன்ஸ் (6 வெற்றி, 2 தோல்வி) அணிகள் தலா 12 புள்ளிகள் பெற்று சமநிலை வகித்தன.

ஆனால் ரன்-ரேட் (+1.856) அடிப்படையில் முன்னிலை வகித்த டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி முதலிடத்தை பிடித்து நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இந்த நிலையில் இறுதிப்போட்டிக்குள் நுழையும் 2-வது அணி எது? என்பதை நிர்ணயிக்கும் வெளியேற்றுதல் சுற்று ஆட்டம் மும்பை டி.ஒய்.பட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெற்றுவருகிறது.

இந்த போட்டியில் டாஸ் வென்ற உ.பி.வாரியர்ஸ் அணி பந்துவீச்சை தேர்வுசெய்துள்ளது. அதன்படி மும்பை இந்தியன்ஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. தொடக்க ஆட்டக்காரர்களாக யாசிகாவும், ஹீலே களமிறங்கினர். யாசிகா 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஹீலே 26 ரன்கள் எடுத்து அவுட்டானார்.

அடுத்து களமிறங்கிய நாடி சிவர் ப்ரண்ட் அதிரடியில் மிரட்டினார். அவர் 38 பந்துகளில் 9 பவுண்டரி, 2 சிக்சருடன் 72 ரன்கள் குவித்து அணியின் ஸ்கோர் உயர வழிவகுத்தார்.

இறுதியில் அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் குவித்தது. உ.பி.வாரியர்ஸ் அணி தரப்பில் சோபி அதிகபட்சமாக 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 183 ரன்கள் எடுத்தால் இறுதிப்போட்டிக்குள் அடியெடுத்துவைத்துவிட முடியும் என்ற நம்பிக்கையில் உ.பி.வாரியர்ஸ் அணி விளையாடி வருகிறது.

 

Tags:    

மேலும் செய்திகள்