சேசிங்கின்போது பேட்டிங்கில் நாங்கள் இன்னும் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம் - தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பாகிஸ்தானை வீழ்த்தி தென் ஆப்பிரிக்கா த்ரில் வெற்றி பெற்றது.

Update: 2023-10-28 01:46 GMT

Image Courtesy: AFP

சென்னை,

உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்கா - பாகிஸ்தான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய பாகிஸ்தான் 46.4 ஓவர்களில் அனைத்து விக்கெட்டையும் இழந்து 270 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இதையடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 47.2 ஓவர்களில் 9 விக்கெட்டுகளை இழந்து 271 ரன் எடுத்து 1 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றிக்கு பின்னர் தென் ஆப்பிரிக்கா கேப்டன் பவுமா பேசியதாவது,

இந்த ஆட்டம் கடைசி வரை த்ரில்லிங்காக இருந்தது. இறுதி நேரத்தில் மிகவும் குழப்பமாக இருந்தாலும் தற்போது வெற்றிக்கு பின்னர் வீரர்கள் வெற்றியை கொண்டாடி வருகின்றனர். குறிப்பாக ஷம்சியை அனைவருமே சிறப்பாக வரவேற்றனர்.

நீங்கள் ஒரு தென்னாப்பிரிக்க ரசிகராக இருந்தால் நிச்சயம் இந்த வெற்றி உங்களுக்கு மகிழ்ச்சியை தந்திருக்கும். எப்பொழுதுமே சேசிங்கின்போது எங்களுக்கு பிரஷர் இருக்கிறது. இதுவரை நாங்கள் அதனை சரியாக நிவர்த்தி செய்து விளையாடவில்லை என்றே நினைக்கிறேன்.

எப்போதெல்லாம் சேசிங் செய்கிறோமோ அப்போதெல்லாம் இதே போன்ற நிகழ்வுதான் தொடர்ந்து நடைபெறுகிறது. இருப்பினும் இந்த சூழலை சமாளித்து எங்களது அணியின் வீரர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டதாக நினைக்கிறேன்.

முதலில் பேட்டிங் செய்யும்போது எங்களுடைய திட்டங்கள் எல்லாம் தெளிவாக இருக்கிறது. ஆனால் சேசிங் செய்யும்போது அந்த அளவிற்கு தெளிவாக இருப்பதாக என்னால் உறுதியாக சொல்ல முடியாது. இன்னும் நாங்கள் சேசிங்கின்போது பேட்டிங்கில் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்