விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்: 5வது வெற்றியை பதிவு செய்யும் முனைப்பில் தமிழ்நாடு...!

விஜய் ஹசாரே கோப்பை கிரிக்கெட்டில் தமிழக அணி அருணாச்சல் பிரதேச அணியை இன்று எதிர் கொள்கிறது.

Update: 2022-11-20 20:05 GMT

கோப்புப்படம்

பெங்களூரு,

38 அணிகள் பங்கேற்றுள்ள விஜய் ஹசாரே கோப்பைக்கான ஒருநாள் கிரிக்கெட் போட்டி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் இதுவரை 5 ஆட்டங்களில் ஆடியுள்ள தமிழக அணி 4 வெற்றி பெற்றுள்ளது. 1 ஆட்டம் மழையால் முடிவு இல்லாமல் போனது.

இதன் மூலம் தமிழக அணி புள்ளி பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில் தமிழக அணி இன்று நடைபெறும் ஆட்டத்தில் அருணாச்சல் பிரதேச அணியை இன்று எதிர்கொள்கிறது.

5 ஆட்டங்களில் 4 தோல்வியுடன் புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கும் அருணாச்சல் பிரதேச அணி முதலாவது வெற்றியை பதிவு செய்யும் வகையில் கடுமையாக போராடும்.

இவ்விரு அணிகள் இடையிலான ஆட்டத்தில் தமிழக அணியே வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்