டி20 உலகக்கோப்பை தொடருக்கான அமெரிக்க அணி அறிவிப்பு...நியூசிலாந்து முன்னாள் வீரருக்கு இடம்

டி20 உலகக்கோப்பை தொடருக்கான அமெரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2024-05-03 16:21 GMT

image courtesy: ICC

வாஷிங்டன்,

20 அணிகள் கலந்து கொள்ளும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டி ஜூன் 1-ந் தேதி முதல் 29-ந் தேதி வரை வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடக்க உள்ளது. இந்தப் போட்டி தொடரில் பங்கேற்கும் 20 அணிகளும் 15 பேர் கொண்ட அணியை அறிவித்து வருகின்றன.

ஏற்கெனவே நியூசிலாந்து, இங்கிலாந்து, தென் ஆப்பிரிக்கா, இந்தியா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், நேபாளம், ஓமன் போன்ற நாடுகள் தங்களது அணிகளை அறிவித்துவிட்டன. இந்நிலையில் இந்த தொடரில் பங்கேற்க உள்ள அமெரிக்க அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. அந்த அணிக்கு மோனாங்க் படேல் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். மேலும் அந்த அணியில் நியூசிலாந்து முன்னாள் வீரரான கோரி ஆண்டர்சன் இடம்பெற்றுள்ளார்.

அமெரிக்க அணி விவரம் பின்வருமாறு:-

மோனாங்க் படேல் (கேப்டன்), ஆரோன் ஜோன்ஸ் (துணை கேப்டன்), ஆண்ட்ரீஸ் கவுஸ், கோரி ஆண்டர்சன், அலி கான், ஹர்மீத் சிங், ஜெஸ்ஸி சிங், மிலிந்த் குமார், நிசார்க் படேல், நிதிஷ் குமார், நோஷ்துஷ் கென்ஜிகே, சவுரப் நேத்ரால்வாகர், ஷாட்லி வான் ஷால்க்வி , ஸ்டீவன் டெய்லர், ஷயான் ஜஹாங்கீர்.

ரிசர்வ் வீரர்கள்: கஜானந்த் சிங், ஜுவானோய் டிரைஸ்டேல், யாசிர் முகமது.

Tags:    

மேலும் செய்திகள்