டிஎன்பிஎல்: ஹாட்ரிக் வெற்றி பெறுமா நெல்லை ராயல் கிங்ஸ்... திருப்பூர் தமிழன்ஸ் அணியுடன் இன்று மோதல்...!

டிஎன்பிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் - திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Update: 2023-06-20 08:51 GMT

Image Courtesy: @TNPremierLeague

திண்டுக்கல்,

7-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி கடந்த 12-ந்தேதி கோவையில் தொடங்கியது. இதில் 8 அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோத வேண்டும்.

'லீக்' முடிவில் புள்ளிகள் அடிப்படையில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளேஆப்' சுற்றுக்கு தகுதிபெறும்.

இந்நிலையில் இன்று நடைபெறும் லீக் ஆட்டத்தில் நெல்லை ராயல் கிங்ஸ் மற்றும் ஐடீரிம் திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதுகின்றன. ஆட்டம் இரவு 7.15 மணிக்கு திண்டுக்கலில் தொடங்குகிறது.

Tags:    

மேலும் செய்திகள்