டி.என்.பி.எல். வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் போன சாய் கிஷோர், சஞ்சய் யாதவ்

டி.என்.பி.எல். வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

Update: 2024-02-07 08:59 GMT

image courtesy; twitter/@TNPremierLeague

சென்னை,

தமிழ்நாடு பிரிமீயர் லீக் எனப்படும் 8-வது டி.என்.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி வருகிற ஜூன், ஜூலை மாதத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதையொட்டி வீரர்கள் ஏலம் சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தில் இன்று காலை 10 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது.

இதில் முதல் வீரராக நட்சத்திர சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் பெயர் ஏலத்தில் வந்தது. எதிர்பார்த்தைப் போலவே அவரை ஏலம் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அவரை டி.என்.பி.எல் வரலாற்றில் அதிகபட்ச தொகையான ரூ. 22 லட்சத்திற்கு திருப்பூர் தமிழன்ஸ் அணி ஏலத்தில் எடுத்தது.

சிறிது நேரத்திலேயே சஞ்சய் யாதவை திருச்சி கிராண்ட் சோழாஸ் அணி ரூ.22 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது. இதன் மூலம் டி.என்.பி.எல். வரலாற்றில் அதிக தொகைக்கு ஏலம் போன வீரர்கள் வரிசையில் சாய் கிஷோர் மற்றும் சஞ்சய் யாதவ் முதலிடத்தில் உள்ளனர்.

இதுவரை நடைபெற்ற ஏலத்தின் முடிவில் விலை போன வீரர்கள் விவரம் பின்வருமாறு;-

சாய் கிஷோர் - ரூ.22 லட்சம் - திருப்பூர் தமிழன்ஸ்

சந்தீப் வாரியர் - ரூ. 10.5 லட்சம் - திண்டுக்கல் டிரகன்ஸ்

டி.நடராஜன் - ரூ.11.25 லட்சம் - திருப்பூர் தமிழன்ஸ்

ஜி.பெரியசாமி - ரூ.8.8 லட்சம் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

அபிஷேக் தன்வார் - ரூ.12.2 லட்சம் - சேப்பாக் சூப்பர் கில்லீஸ்

சஞ்சய் யாதவ் - ரூ.22 லட்சம் - திருச்சி கிராண்ட் சோழாஸ்

ஹரிஷ் குமார் - ரூ. 15.4 லட்சம் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ்

விவேக் - ரூ.11 லட்சம் - சேலம் ஸ்பார்ட்டன்ஸ்

மோகித் ஹரிகரன் - ரூ. 10.2 லட்சம் - நெல்லை ராயல் கிங்ஸ்

Tags:    

மேலும் செய்திகள்