டி.என்.பி.எல். கிரிக்கெட்: திருச்சி அணியை வீழ்த்தி சேப்பாக் சூப்பர் கில்லீஸ் வெற்றி

திருச்சி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது.

Update: 2024-07-22 17:33 GMT

image courtesy: TNPL twitter

நெல்லை,

தமிழ்நாடு பிரீமியர் லீக் (டி.என்.பி.எல்.) தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் - திருச்சி கிராண்ட் சோழாஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற திருச்சி அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான சந்தோஷ் குமார் - ஜெகதீசன் செஞ்சுரி பார்ட்னர்ஷிப் அமைத்து சிறப்பான தொடக்கம் கொடுத்தனர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில் சந்தோஷ் குமார் 56 ரன்களிலும், ஜெகதீசன் 51 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இறுதி கட்டத்தில் பெராரியோ (30 ரன்கள்), பிரதோஷ் ரஞ்சன் பால் (29 ரன்கள்) மற்றும் அபிஷேக் தன்வார் (26 ரன்கள்) அதிரடியாக விளையாட சேப்பாக் சூப்பர் கில்லீஸ் 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 198 ரன்கள் குவித்தது. திருச்சி தரப்பில் அதிகபட்சமாக ராஜ்குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனையடுத்து 199 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்கை நோக்கி திருச்சி அணி பேட்டிங் செய்தது.

அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 184 ரன்கள் எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக, வாஷீம் அகமது 48 ரன்களும், ஆர் ராஜ்குமார் 39 ரன்களும் எடுத்தனர். அதிரடியாக விளையாடிய ஜாபர் ஜமால் 52 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த நிலையில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் திருச்சி அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

Tags:    

மேலும் செய்திகள்