என்னுடைய லட்சியம் இதுதான் - ஓய்வு குறித்து ரோகித் சர்மா

தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-15 02:27 GMT

image courtesy: PTI

மும்பை,

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்ற ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வென்று சாதனை படைத்தது. இந்த வெற்றியுடன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் ஓய்வு பெறுவதாக அறிவித்தனர்.

இளம் வீரர்களுக்கு வழிவிடும் வகையில் அவர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். அதே சமயம் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து விளையாடுவதாக அவர்கள் அறிவித்துள்ளனர்.

இந்நிலையில் 2025 சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலில் இந்தியாவுக்கு கோப்பையை வெல்வதே தம்முடைய லட்சியம் என ரோகித் சர்மா தெரிவித்தார். எனவே தற்போதைக்கு ஓய்வு பெறும் எண்ணமில்லை என்று தெரிவிக்கும் அவர் இது குறித்து பேசியது பின்வருமாறு:-

"இதை நான் ஏற்கனவே கூறியுள்ளேன். மிகவும் நீண்ட தூரம் எதையும் செய்யவில்லை. எனவே நான் நீண்ட காலம் விளையாடுவதை நீங்கள் பார்க்க முடியும். இதுவரை முழுமையான ஓய்வு பற்றி நான் சிந்திக்கவில்லை. ஆனால் வாழ்க்கை உங்களை எங்கே எடுத்துச் செல்லும் என்பது எனக்கு தெரியாது. தற்சமயத்தில் நான் நன்றாக விளையாடுகிறேன். எனவே இன்னும் சில வருடங்கள் நான் தொடர்ந்து விளையாடலாம் என்று நினைக்கிறேன். அதன் பின் எனக்குத் தெரியாது. தற்போதைக்கு சாம்பியன்ஸ் டிராபியை வெல்ல விரும்புகிறேன். அதன் பின் 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல். அதற்கு இந்தியா தகுதி பெறும் என்று நான் நம்புகிறேன்" என கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்