டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்த இரு அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு - ஷேன் வாட்சன்
டி20 உலகக் கோப்பையை வெல்ல இந்த இரு அணிகளுக்கு தான் அதிக வாய்ப்பு உள்ளதாக ஷேன் வாட்சன் தெரிவித்துள்ளார்.
8-வது டி 20 ஓவர் உலக கோப்பை போட்டி அக்டோபர் 16-ம் தேதி முதல் நவம்பர் 13-ம் தேதி வரை ஆஸ்திரேலியாவில் நடக்கிறது. டி-20 உலக கோப்பையில் மொத்தம் 16 நாடுகள் பங்கேற்கின்றன. நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து, நியூசிலாந்து, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய 8 நாடுகள் நேரடியாக சூப்பர் 12 சுற்றில் விளையாடும். இலங்கை, வெஸ்ட் இண்டீஸ் உட்பட 8 அணிகள் பங்கேற்கும் முதல் சுற்றில் இருந்து 4 அணிகள் சூப்பர் 12 சுற்றில் விளையாடும்.
இந்நிலையில் டி20 உலக கோப்பையை எந்த அணி வெல்லும் என்பது குறித்து ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் வாட்சன் கருத்து தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் கருத்து தெரிவிக்கும் போது,
ஆஸ்திரேலியா அணி தனது சொந்த மண்ணில் விளையாடுவதால் அந்த அணிக்கு கூடுதல் வாய்ப்பு உள்ளது. ஆஸ்திரேலிய அணி கடந்து சில போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருகிறது. மற்ற ஆடுகளங்களை விட ஆஸ்திரேலிய ஆடுகளம் சற்று வித்தியாசமாக இருப்பதால் மற்ற அணிகளுக்கு அதற்கு ஏற்ற போல் தங்களது ஆட்டத்தை மாற்றிக்கொள்ள சில காலம் ஆகும் என்றும் அவர் கூறினார்.
இதனால் ஆஸ்திரேலிய அணிக்கு தான் கூடுதல் சாதகம் என்றார். ஆஸ்திரேலியாவுக்கு அடுத்ததாக இந்திய அணி டி20 உலக கோப்பையும் வெல்ல வாய்ப்பு உள்ளது. இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 தொடரில் மிகச்சிறப்பாக ஆடியது.
இவ்வாறு அவர் கூறினார்.
வரும் 6ம் தேதி ஆஸ்திரேலியாவுக்கு செல்லும் இந்திய அணி அங்கு பெர்த் நகரில் தனது பயிற்சியை தொடங்குகிறது. இந்திய அணி வரும் 17ம் தேதி ஆஸ்திரேலியா, 19ஆம் தேதி நியூசிலாந்துடனும் பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்க்கிறது குறிப்பிடத்தக்கது.