தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரிலிருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்..!

இந்தியா - தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

Update: 2023-12-17 11:21 GMT

image courtesy; AFP

ஜோகன்ஸ்பர்க்,

இந்திய கிரிக்கெட் அணி தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகளுக்கு இடையே முதலில் நடைபெற்ற டி20 தொடர் 1-1 என்று சமனில் முடிந்தது. தற்போது ஒருநாள் தொடர் நடைபெற்று வருகிறது.

ஒருநாள் தொடர் நிறைவடைந்த உடன் இவ்விரு அணிகளுக்கு இடையிலான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் ஆரம்பமாக உள்ளது. அதன்படி முதலாவது டெஸ்ட் போட்டி வரும் 26ஆம் தேதி நடைபெற உள்ளது.

இந்நிலையில் இந்த டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம்பெற்றிருந்த விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான இஷான் கிஷன் தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டெஸ்ட் தொடரிலிருந்து விலகியுள்ளார். அவருக்கு பதிலாக கே.எஸ்.பாரத் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி விவரம் பின்வருமாறு;-

ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ருதுராஜ் கெய்க்வாட், கே.எல்.ராகுல்,  ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஜஸ்பிரித் பும்ரா , பிரசித் கிருஷ்ணா, கேஎஸ் பாரத். 

Tags:    

மேலும் செய்திகள்