இந்தியா-நியூசிலாந்து இடையேயான முதல் டி20 போட்டி மழையால் ரத்து
வெலிங்டனில் தற்போது மழை பெய்து வருவதால் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது;
வெலிங்டன்,
இந்திய அணி நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20, ஒருநாள், தொடர்களில் விளையாடுகிறது. இந்தியா- நியூசிலாந்து அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் போட்டி வெலிங்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்க இருந்தது
இந்த நிலையில் வெலிங்டனில் தற்போது மழை பெய்து வருவதால் டாஸ் கூட போடாமல் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது. இரு அணிகளுக்கும் இடையேயான 2வது போட்டி நாளை மறுநாள் நடக்கிறது.