அந்த இந்திய வீரர் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் கவனம் செலுத்த வேண்டும் - வாசிம் அக்ரம் அட்வைஸ்

அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.

Update: 2024-07-04 12:28 GMT

கராச்சி,

ஐ.சி.சி. 9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்த தொடர் முழுவதுமே இந்திய அணியினர் சிறப்பாக விளையாடினர். குறிப்பாக இந்திய அணியின் பந்துவீச்சு இந்த தொடர் முழுவதுமே அசத்தலாக இருந்தது. ஒரு பக்கம் பும்ரா தனது திறமையை காண்பிக்க மறுபக்கம் பாண்ட்யாவும் ஆல் ரவுண்டராக தனது சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தார்.

அதேவேளையில் இளம் வேகப்பந்து வீச்சாளரான அர்ஷ்தீப் சிங் எதிர்பார்ப்பை விட அதிகமாக தனது சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்தினார். இந்த தொடர் முழுவதுமே அவரது பந்துவீச்சு அசத்தலாக இருந்தது. 8 போட்டிகளின் விளையாடிய அர்ஷ்தீப் சிங் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி நடப்பு டி20 உலககோப்பை தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் பரூக்கியுடன் இணைந்து முதலிடத்தை பிடித்து அசத்தினார்.

இந்நிலையில் அர்ஷ்தீப் சிங் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் விளையாட வேண்டும் என்று பாகிஸ்தான் முன்னாள் வீரரான வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் கூறுகையில். "அர்ஷ்தீப் சிங் என்னை மிகவும் கவர்ந்து விட்டார். பந்தை இருபுறமும் ஸ்விங் செய்யும் அவர் திறமையான வீரர். அவரிடம் நல்ல வேகமும் இருக்கிறது. இன் ஸ்விங், அவுட் ஸ்விங் இருவகையான பந்தையும் அவர் அற்புதமாக வீசுகிறார். புதிய பந்தில் அட்டகாசமாக வீசும் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாட வேண்டும் என்பதை மனதில் வைத்து செயல்பட வேண்டும். ஒரு நாள் கிரிக்கெட், டி20 கிரிக்கெட்டை தாண்டி டெஸ்ட் கிரிக்கெட் என்பது ஒரு பாரம்பரியமான முறை. எனவே அந்த வகையான போட்டிகளில் அவர் விளையாட வேண்டும்"என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்