அந்த ஒரு பந்து தான் இந்தியாவின் தோல்விக்கு காரணம் - கவாஸ்கர் கருத்து

இந்தியாவுக்கு எதிரான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

Update: 2023-03-03 18:14 GMT

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே இடையேயான 3-வது டெஸ்ட்டில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது.

முதல் பேட்டிங் ஆடிய இந்தியா முதல் இன்னிங்சில் 109 ரன் எடுத்தது. அடுத்து களமிறங்கிய ஆஸ்திரேலியா 197 ரன்கள் சேர்ந்தது. பின்னர், 2வது இன்னிங்சை ஆடிய இந்தியா 163 ரன்களில் ஆல் அவுட் ஆனது.

இறுதியில் 78 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா 9 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி அபார வெற்றிபெற்றது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் ஜடேஜா பந்து வீச்சில் ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லபுஷேன் (0) ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால், அந்த பந்து நோபால் என்று ரிவ்யூவில் தெரியவந்தது.

இதனை தொடர்ந்து ஆட்டத்தை தொடர்ந்த லபுஷேன் 31 ரன்கள் எடுத்தார். அவரும் குவாஜாவும் சேர்ந்து 96 ரன்கள் எடுத்தனர்.

இந்நிலையில், இந்திய அணியின் மோசமான தோல்வி குறித்து இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சுனில் கவாஸ்கர் கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இந்த டெஸ்ட் போட்டியை திரும்பி பார்க்கும்போது, இந்திய அணி தோல்வியடைந்ததற்கான காரணம் என்ன என்று உங்களுக்கு தெரியும். மார்னஸ் லபுஷேன் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். ஆனால், நோ பால் என்பதால் ஆட்டத்தை தொடர்ந்த அவர் 96 ரன்கள் பாட்னர்ஷிப் சேர்த்தார். ஆனால் இந்தியா 19 ரன்களில் ஆல் அவுட் ஆனது. அது தான் இந்திய அணியின் தோல்விக்கான திருப்பு முனை. லபுஷேனுக்கு வீசப்பட்ட அந்த நோபால் தான் இந்திய அணியின் தோல்விக்கு காரணம் என்று நான் நினைக்கிறேன்' என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்