டி20 உலகக்கோப்பை; இலங்கை - நேபாளம் ஆட்டம் - மழை காரணமாக டாஸ் தாமதம்

இந்த தொடரில் இன்று நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான இலங்கை - நேபாளம் அணிகள் மோத உள்ளன.;

Update:2024-06-12 05:00 IST

Image Courtesy: AFP

புளோரிடா,

20 அணிகள் கலந்து கொண்டுள்ள டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீசில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெறும் 23வது லீக் ஆட்டத்தில் ஆசிய அணிகளான இலங்கை - நேபாளம் அணிகள் மோத உள்ளன.

இந்த தொடரில் இதுவரை நேபாள அணி 1 லீக் ஆட்டத்தில் ஆடி தோல்வியும், இலங்கை அணி 2 லீக் ஆட்டங்களில் ஆடி இரண்டிலும் தோல்வியும் கண்டுள்ளன. அதனால் முதல் வெற்றிக்காக இரு அணிகளும் கடுமையாக போராடும்.

இந்த ஆட்டத்தில் இலங்கை அணி தோல்வி கண்டால் தொடரில் இருந்து வெளியேறுவது உறுதியாகிவிடும். இந்நிலையில் இந்த ஆட்டத்திற்கான டாஸ் தொடங்குவதற்கு முன்னர் அங்கு மழை பெய்து வருவதால் டாஸ் போடுவதில் சற்று தாமதம் ஏற்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்